Ads Area

கல்முனையில் கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம்.

நூருல் ஹுதா உமர்

எமது நாட்டில் பரவிவரும் கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு நாட்டின் பல பகுதிகளிலும் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரனையுடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாத் (ரஸாக்) அவர்களின் முயற்சியினால் தனது சொந்த நிதியின் பெறப்பட்ட கிறுமிநாசினிகள் தெளிக்கும் இயந்திரங்களை கொண்டு இவ்வேலைத்திட்டம் இன்று கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் பகுதியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார், உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இவ்வேலைத்திட்டம் கல்முனையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe