Ads Area

கொரோனா பாதிப்பை சிறப்பாக கையாளும் பெண்கள் ஆட்சி செய்யும் ஆறு நாடுகள்.

உலக அளவில் கொரோனா பரவல் விவகாரத்தை பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் சிறப்பாக கையாளப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அந்நாட்டுத் தலைவர்களுக்கு பாராட்டிவருகின்றனர்.

சீனாவில் ஊஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் சிதைத்துவருகிறது. தற்போது, ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸின் மையமாக இருந்துவருகிறது. அதேபோல, அமெரிக்காவும் கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான தற்பாதுகாப்பை ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் சிறப்பாக கையாண்டுள்ளன என்றும் இந்த நாடுகளுக்கு உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள் தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரோனா வைரஸ் விவகாரத்தை சிறப்பாக கையாள்கிறார் என்பதை விவரிக்க வாஷிங்டன் போஸ்ட் தலைப்பை வைத்து புரிந்துகொள்ளலாம். அதில், ‘நியூசிலாந்து கொரோனா வளைவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.


அந்த நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து அவர் தெரிவித்த ஒரு கூற்று பரவாலகப் பேசப்பட்டது. ‘உங்களுக்கு கொரோனா பாதித்தது போன்று செயல்படுங்கள்’ என்பதுதான் அது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe