Ads Area

சிறுமி பாலியல் வன்புணர்வு விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கமாட்டாது: நாமல்

13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தணமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஏ. ரணவீர உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மொனராகலை, செவணகலை, கிரிவெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியை மூன்றுமாதங்களுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,தனது டுவிட்டர் பதிவில், சம்பவம் குறித்து தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடும் இடம்பெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe