காரைதீவு நிருபர் சகா.
புத்தளத்திலிருந்து மாளிகைக்காடு கிராமத்திற்கு வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள புத்தளம் பிரதேசத்திலிருந்து இருவர் மாளிகைக்காட்டுக் கிராமத்திற்கு நேற்று முந்தினம் வந்திருப்பதனை மக்கள் பிரதேச செயலரிடம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலரின் உத்தரவின்படி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எடுத்த நடவடிக்கையின் பேரில் அந்த இருவரும் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.