Ads Area

நாவிதன்வெளியில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 46 பேருக்கு சான்றிதழ் வழங்கி விடுவிப்பு.

(எம்.எம்.ஜபீர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமையின் கீழுள்ள நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 46 பேர் மருத்துவ சான்றிதழ் வழங்கி (06) இன்று விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா, ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு  வருகைதந்த  குறித்த இவர்களுக்கு எவ்வித கொரோனா தொற்று அறிகுறிகளும் இல்லாத நிலையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்திலிருந்து இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.

நாவிதன்வெளி  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் உள்ளிட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.மனோ ரஞ்ஜிதன், பொது சுகாதார பரிசோதர்களான ஏ.எச்.எம்.ஜாபீர், ஏ.எம்.றம்சீன் உள்ளிட்ட சுகாதார துறை உத்தியோகத்தர்கள் இவர்களின் இல்லங்களுக்கு சென்று தனிமைப்படுத்தும் காலம் முடைவடைந்துள்ளதை உறுதிப்படுத்தி மருத்துவ சான்றிதழ் வழங்கி வைத்தனர்.

காய்ச்சல், தடுமல், இருமல், தொண்டை நோ அறிகுறிகள் ஏதுவும் ஏற்பாட்டால் பிரதேச பொது சுகாதார பரிசோதகளுக்கு தெரியப்படுத்துமாறும் மேலதிக தேவைக்கு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அவரச தொலைபேசி இலக்கம் 0777257139 எனும் இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe