கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 1607 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (05.04.2020) மட்டும் புதியதாக 279 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 4 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன் இதுவரை 123 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(கத்தார் தமிழ்)