Ads Area

கத்தாரிலுள்ள இலங்கையர்கள் தங்களை தாய் நாட்டிற்கு திருப்பி அழைக்கும் படி ஜனாதிபதியிடம் கோரிக்கை.

கத்தாரில் தொழிலுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், தங்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தாரில் இதுவரை கிட்டத்தட்ட 11,000க்கும் அதிகமான கொரோனா நோயாளார்கள் பதிவாகியுள்ளனர். ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் இந்த குழு, சுமார் 800 இலங்கையர்கள் அங்கு பணிபுரிவதாக கூறுகிறது.

நோயுற்றவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததன் பின்னர் என்ன நடக்கும் என்று தங்களால் அறிய முடியவில்லை என்றும், இதுகுறித்து அங்குள்ள தூதரகத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும் தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.

வைரஸ் தொற்று பரவல் இருக்கின்றபோதும், அங்குள்ள பணியாளர்கள் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த இடத்தின் அனைத்து ஊழியர்களும் ஆபத்தில் உள்ளனர். எனவே அவர்களை விரைவில் தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு ஜனாதிபதியை கோருவதாவும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். 

(நன்றி - வேலைத்தளம்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe