Ads Area

சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தில் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.

காரைதீவு சகா.

லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் உலர் உணவு நிவாரணப்பொதி வழங்கும் பணி -31-செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கொரோனா அச்சத்தால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவு நிவாரணப்பொதி வழங்கும் திட்டம்  சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சங்கத்தின் கல்வி மற்றும் சமுகசேவைக்கான இணைப்பாளரும் இளம்விஞ்ஞானியுமான சோ. வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் இவ்வுணப்பொதி 160 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கோரக்கர் ஆலயபரிபாலனசபையினர் மற்றும் பல்ககலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதற்கான உதவிஒத்தாசைகளை வழங்கினார்கள்.

ஸ்ரீ கோரக்கர் கிராம மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர்களான பி.பாலசுப்பிரமணியம் எஸ்.மோகன்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் ஆலயசெயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் நிவாரணப்பொதியை வழங்கிவைத்தனர்.

லண்டன்சைவமுன்னேற்றச்ங்கத்தின் உபதலைவர்  கே.நிறஞ்சன் தலைமையில் 28 உயர்மட்ட ஆட்சிபீட உறுப்பினர்களின் நிதியுதவியில் இந்நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.


இதேவேளை  மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி. எஸ்.யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் 200 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாரத்தில் வன்னிப்பிராந்தியத்திலும் நிவாரணப்பொதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் தமது 40வது வருடநிறைவுக்காக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள்போராளிகள் 40பேருக்கு கொழும்பில் இலவசமாக திருமணம் செய்துவைத்தது. மட்டக்களப்பிலும் கல்முனையிலும் சிறுவர்பாதுகாப்பு நிலையங்களை அமைத்தது போன்ற பலபணிகளை இலங்கையில் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe