2015 O/L Batch Foundation Sammanthurai இனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட " தொழில் ஊக்குவிப்பு திட்டம் " எனும் தொணிப் பொருளின் அடிப்படையில் அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்களுக்கு தொழில் செய்ய உதவும் திட்டமே இந்த திட்டமாகும்.
அந்த வகையில் அண்மையில் ( மே 27 ) சவளைக்கடை பிரதேசத்தில் குடியிருப்பு முனை எனும் ஊரில் வசிக்கும் நபருக்கு மீன் விற்று உழைக்கும் வகையில் துவிச்சக்கர வண்டி , மீன் பெட்டி, தராசு, தொகைப் பணமும் எமது அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டு இத்திட்டம் அங்குராப்பனம் செய்யப்பட்டது.
மேலும் எமது 2015 O/L Batch Foundation ஆனது கடந்த காலங்களில் வாழ்வாதாரம் இழக்கப்பட்ட மக்களுக்கும் பல வழிகளில் உதவி செய்தமை குறிப்பிடத்தக்கது.