சவூதி அரேபியா கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இந்த காலகட்டத்தில் காலாவதியான சுற்றுலா விசாக்கள் (Tourist visas) மூன்று மாதங்களுக்கு தானாகவே இலவசமாக நீட்டிக்கப்படும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் (ஜவாசத்) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்கும் தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையானது சவூதி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
ஆகவே சவுதி அரேபியாவிற்கு கடந்த நாட்களில் சுற்றுலா விசாவில் வருகை தந்தோர் தங்களது விசாக் காலம் காலாவதியாகிவிட்டது என்று கவலை கொள்ளத் தேவையில்லை.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa