Ads Area

கத்தாரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்.

கத்தாரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஹமத் வைத்தியசாலை தொற்று நோய்ப் பிரிவுப் பொறுப்பாளர்   Dr Abdullatif Mohamed al Khal அவர்கள் நேற்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்கள். எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1000ஐ எட்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கையானது ஒரு சில வாரங்களுக்கு தொடரலாம். மேலும் அதன் பின்னர் எண்ணிக்கையானது வீழ்ச்சியடையும் என்பதாகவும் தலைமை வைத்தியர் தெரிவித்துள்ளார்கள்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கத்தாரில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மேலும் இதுவரை 1300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோயிலிரந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய கத்தார் பிரஜைகள் மத்தியில் தான் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகமாக காணப்பட்டது. தற்போது அது குறைவடைந்து வெளிநாட்டு பணியாளர்கள் மத்தியில் பரவும் வேகத் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் செனயாப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி தலைமைய வைத்தியரான Dr Abdullatif Mohamed al Khal அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thanks- Qatar Tamil
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe