Ads Area

சவுதி அரேபியாவில் ஒவ்வொரு நாளும் பலியெடுக்கும் கொரோனா இதுவரை 169 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் நேற்று (01.05.2020) மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 7 பேருடன் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 169 ஆக உயர்வடைந்துள்து. 

சவூதியில் இதுவரை 24,097 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை சவுதி அரேபியாவில் 3,555 பேர் இந்நோய் தொற்றுக்கு உள்ளாகி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe