பாறுக் ஷிஹான்
ஒலுவில் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை (30) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏலவே மூட தீர்மானம் எடுக்கப்பட்ட ஒலுவில் தனிமைப்படுத்தல் தொடர்ந்து இயங்குவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நால்வரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியூடாக உடனடியாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.