Ads Area

அலுவலகங்களில் வரவைப் பதிவு செய்ய எல்லோரும் ஒரே பேனாவைப் பயண்படுத்த வேண்டாம்.

பாறுக் ஷிஹான்-

அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

டாக்டர் சுகுணன் மேலும் கூறியதாவது ,

அலுவலகங்களிலும் சரி தனியார் அலுவலகங்களிலும் சரி நாளை கடமைக்கு செல்லவும் இருக்கின்ற உத்தியோகஸ்தர்களுக்கு சில அறிவுரைகளை தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது. அந்த விதத்தில் உத்தியோகத்தர்களிடம் யாராவது ஒருவருக்கு காய்ச்சல், தடிமல், இருமல் ,தொண்டை வலி இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்கள் நாளை கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

அதைத் தவிர சாதாரணம் என்று கருதுபவர்கள் கடமைக்கு செல்லுங்கள் அந்த விதத்தில் நீங்கள் கடமைக்கு செல்லுமிடத்தில் கட்டாயமாக ஒரு முகக் கவசத்தை அணிந்து செல்லுங்கள் கடமையாற்றும் நிறுவனத்தின் முன்புறமாக தொற்று நிற்கக்கூடிய பொறி முறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு கைகளை தொற்று நீக்குவதற்கான தொற்று நீக்கிகள் அங்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக பின்னர் அலுவலகங்களுக்குள் நுழையும் போது தங்களது சப்பாத்துக்களின் அடி பாகங்களை தொற்று நீக்கக் கூடிய வகையில் சில தட்டுக்களிலாவது ஒரு சென்ரி மீட்டர் அளவிற்காவது தொற்று நீக்கி களை வைத்து அவற்றில் சுத்தப்படுத்திக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தது மிகவும் நன்று . அந்த அலுவலகங்களின் வாசல்களில் உத்தியோகஸ்தர்கள் அது உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய கருவிகளை பயன்படுத்தி பார்க்கக் கூடிய வசதிகள் இருக்குமாயின் மிகவும் விரும்பத்தக்க ஒரு விடயம்.

அதைத்தவிர உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்துக்குள் தங்களது வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது அதேபோன்று கைரேகை பதிவேட்டை மேற்கொள்ள முன்னரும் கைரேகை பதிவேட்டை பதிவு செய்த பின்னரும் கைகளை நன்றாக தோற்று நீக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் அந்த இயந்திரத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பல மாதங்களின் பின்னர் கடமைக்கு திரும்பவும் இந்த சந்தர்ப்பத்தில் நண்பர்களை சக உத்தியோகத்தர்களை காண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது .

அவர்களிடம் கை கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் சக உத்தியோகத்தர்களை தொடுவதோ அவர்களது உபகரணங்களை பாவிப்பது அருகில் செல்வதோ தவிர்க்கப்படவேண்டும் இதன்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முஸ்லிம்களின் புனித ரமலான் காலத்தில் முக்கியமாக ஆடைகள் விற்கும் கடைகளில் சனநெரிசல் சற்று கூடுதலாக இருப்பதை நாங்கள் அவதானிக்க முடிந்தது நாளையும் தளர்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக இந்த புடவைகள் ஆடைகள் கடைகள் என்பவற்றில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதன் உரிமையாளர்கள் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சிகையலங்கார நிலையங்களை திறப்பதாக இருந்தால் குறித்த பிராந்தியத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். குறித்த சலூன்களில் வேலை செய்பவர்களையும் அவதானித்து இட வசதியினையும் கருத்திற்கொண்டு அந்த சான்றிதழ் சரியாக இருக்குமாயின் கொடுக்கப்படும். சலூன்களை பொறுத்த அளவில் அங்கு வருபவர்களுக்கு நேரங்களை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை உள்வாங்கி அவர்களது வேலைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். குறித்த கடைகளில் காத்திருந்து சிகை அலங்காரம் செய்பவர்கள் ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கிடையே சமூக இடைவெளி நிச்சயமாக பேணப்பட வேண்டும். குறித்த கடைகளில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் இருக்கக் கூடாது . சலூன்களில் பாவிக்கும் துணிகள் கத்தரிக்கோல் சீப்பு என்பன தொற்றுநோய்களை பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக முடி திருத்துபவர் திருத்தத்தை மேற்கொள்ள வரும் அணிகலன்களை அணிந்திருக்க வேண்டும்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe