Ads Area

கத்தாரில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டு பணியாளர்கள்! - தலைமை வைத்தியர் தகவல்.

தற்போது கத்தாரில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டு பணியாளர்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பாக தேசிய தொற்றுநோய் தயாரிப்புக் குழுவின் இணைத் தலைவர் தலைவர் Dr Abdullatif al Khal அவர்கள் கத்தார் தொலைக்காட்சிக்கு இன்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த ஏழு நாட்களில் கத்தாரில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு காரணம் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் எற்பட்டுள்ள மந்த நிலையே காரணமாகும்.

ரமழான் மாத்தில் குறிப்பாக இப்தார் ஒன்று கூடல், காரணமாக சமூக இடைவெளி என்பது பொதுமக்களால் கடை பிடிக்கப்படுவதில்லை. தற்போது கத்தாரில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டு பணியாளர்கள் தான். மேலும் கத்தார் பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் COVID-19 தொற்றானது இரண்டு வாரங்களுக்கு இருந்ததை விட 50 வீதம் அதிகரித்துள்ளது. 

கத்தாரில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் உச்ச நிலையை அடைந்திருந்தாலும், நாளாந்த வழக்குகள் உச்சத்தை அடையவில்லை. தினசரி வழக்குகள் குறையத் தொடங்குவதற்கு முன்பே அவை தொடர்ந்து உயரும் என்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படும் வீதம் கத்தாரில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 7000 மாதிரிகள் அளவில் பரிசோதிக்கப்படுகின்றன. அவைகளில் சில நோயாளிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் கத்தார் தேசிய தொற்றுநோய் தயாரிப்புக் குழுவின் இணைத் தலைவர் தலைவர் Dr Abdullatif al Khal அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

QatarTamil.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe