Ads Area

குவைத்திலிருந்து இலங்கை திரும்ப இலவச விமான பயணச் சீட்டுக்கள்.

(ஜே.எப்.காமிலா பேகம்)

குவைத்திலிருந்து இலங்கை திரும்ப இலவச விமான பயணச் சீட்டுக்கள்.

இலங்கையில் உள்ள தெரண தொலைக்காட்சியின் உரிமையாளரும், இலங்கையின் முன்னனி வர்த்தருமாகிய திலிப் ஜயவீர, கொரோனா வைரஸினால் குவைட் நாட்டில் நெருக்கடியில் சிக்கியிருக்கும், இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவருவதற்காக அவர்களுக்கு இலவச விமான சீட்டுக்களை வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக அவர் 2.2 கோடி ரூபாவை,  வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டில் கொரோனா நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்கள் அங்கு உள்ள இலங்கைத் துாதரகத்திற்கு முன்னாள் தங்களை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டிருந்தனர்.

இதே சமயம் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை தாய் நாட்டிக்கு மீள அழைக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக இலங்கை அமைச்சரவையிலும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

battinews.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe