சற்றுமுன் சம்மாந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் கிணற்றில விழுந்து பரிதாப மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (9) மாலை 5:30 மணியளவில் சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03 பகுதியில் 6 மற்றும் 3 வயது மதிக்க தக்க இரு ஆண் குழந்தைகள் கொட்டு பதிக்கப்பட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரமழான் மாதம், ஒரே தாயின் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.