சவூதி அரேபியாவின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான பெருமதிப்பிற்குரிய மன்னர் சல்மான், நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மதீனாவில் உள்ள நபிகள் மசூதியை படிப்படியாக வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதன்படி வழிபாட்டாளர்கள் நாளை காலை (ஷவ்வால் 8) ஃபஜ்ர் தொழுகையிலிருந்து மசூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வாறு மசூதிக்குள் அனுமதிக்கப்படும் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையானது மசூதியின் மொத்த இடத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக்கம் மற்றும் சதுர பகுதிகளில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டு தொழுகையானது மார்பிள்(marble) தரையில் நடைபெறும் என்பதனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள சவூதி அரேபியா எடுத்துவரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளின் அடிப்படையில், நாளை முதல் நபிகள் மசூதி படிப்படியாக மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette