ஐ.எல்.எம்.நாஸிம்
(சம்மாந்துறை)
நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கறை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.எனினும் உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்..
இதனடிப்படையில் நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயான 57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும்,சம்மாந்துறை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் சம்மாந்துறை வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.