இந்தோனேசியா Cianjur, West Java பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு பாத்திமா கொரோனா என பெயர் சூட்டியுள்ளனர்.
கடந்த வியாழக் கிழமை பிறந்த அக் குழந்தைக்கு முழுப் பெயராக நாரா பாத்திமா கொரோனா என சூட்டப்பட்டது. இது குறித்து 32 வயதான குழந்தையின் தந்தை ரம்தான் அப்ரியானா குறிப்பிடுகையில், தனது குழந்தையின் கடைசி பெயர் எதிர்மறையான ஒன்றைக் குறிக்கவில்லை, ஏனெனில் இந்த வார்த்தைக்கு லத்தீன் மொழியில் “கிரீடம்” என்று பொருளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் குறித்த பெயரானது தற்போது ஏற்பட்டுள்ள கொரோன நோயினை ஞாபகமூட்டும் படியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போல் பிலிப்பைன்ஸின் பேகோலோடில் உள்ள ஒரு பினாய் தம்பதியினர், ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்த தங்கள் பெண் குழந்தைக்கு “கோவிட் மேரி” என்று பெயரிட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதே போல் சில வாரங்களுக்கு முன்னர், தென்னிந்தியாவில் இரண்டு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு “கொரோனா குமார்” மற்றும் “கொரோனா குமாரி” என்று பெயரிட்டனரிட்டுள்ளனர்.
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.