அம்பாறை மாவட்டத்திலுள்ள மகாஓயா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக (IP) கடமையாற்றும் நிந்தவூர் 4ம், பிரிவில் வசிக்கும் கலாநிதி அல்-ஹாஜ் எஸ்.எம். சதாத் அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக (CI) பதவி உயர்வு பெற்று 08-05-2020ம், திகதி தனது பதவியை பொறுப்பேற்று நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
31 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் உளவியல் துறையிலும், குற்றவியல் தகவல் தொழினுட்பத்திலும் டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளார்.
பல்வேறு பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ள இவர் 2014ம், ஆண்டுக்கான தேசிய சமாதான சங்கத்தில் National Excellency Award and Gold Medal பெற்றதோடு அவ்வாண்டில் சமூக சேவைக்கான தங்கப் பதக்கத்தினை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் கௌரவ தி.மு. ஜயரட்ன அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.