இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு அவர்களுக்கு எதிரான விரோதப் போக்கு மற்றும் முஸ்லிம்கள் விடையத்தில் பாரபட்சம் காட்டுதல் போன்ற இனவாத செயற்பாடுகள் விடையங்களில் உலக இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் (Organization of Islamic Cooperation (OIC) பொதுச் செயலாளர் Yousef bin Ahmed Al-Othaimeen தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் (COVID-19) மற்றும் அந் நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை இலங்கை அரசாங்கம் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களுக்கு முரணாக தகனம் செய்வதாகவும், இது விடையத்தில் இதற்கு எதிராக கருத்துத் தெரிவித்த முஸ்லிம் சமூகப் பொறுப்பாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வதாகவும் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கை முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு, மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் படியும் அவர்களின் மத நடைமுறைகள் மற்றும் சடங்குகளை மதித்து நடக்கும் படியும், அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் படியும் முஸ்லிம்கள் விடையத்தில் வெறுப்பை வளர்ப்பதற்கு பதிலாக அனைத்துத் தரப்பினர்களது உரிமைகளை உறுதிப்படுத்தும் படியும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி மூலம் - https://colombogazette.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.