முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராமங்களில் கிராம அலுவலர் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு கிராம அலுவலரே கடமையாற்றி வருகின்றார். இந்த இரு கிராம அலுவலர் பகுதியிலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் கடந்த மாதம் வயோதிபர் கொடுப்பதில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் கொடுப்பனவு பெற்றவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு மீதி 3000 ரூபாவினை வழங்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் மக்களால் வெளியில் கொண்டுவர பட்டதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு அந்த கொடுப்பனவில் மீதி 3000 கொடுப்பனவையும் கொண்டு சென்று கொடுத்த கிராம அலுவலர் ஏனையவர்களுக்கு அந்த கொடுப்பனவுகளை வழங்கவில்லை.
குறித்த பகுதியில் இன்று கூட அந்த கொடுப்பனவு வழங்கப்படாமல் பல குடும்பங்கள் இருக்கின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபாயில் 2000 கொடுத்து 3000ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவியபோது, குறித்த விடயம் தொடர்பில் விசேட குழு ஒன்று அமைத்து தாங்கள் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.
Thanks - Virakesary
Thanks - Virakesary