Ads Area

துணிக் கடைகளுக்குள் முட்டி மோதி திரிகின்றது நம் சமூதாயம்.

சம்மாந்துறையில் உள்ள அனைவரும் கவனம் செலுத்தவும் இல்லையேல் நிலமை மோசமடையலாம்.

Covid 19 தாக்கத்தினால் இலங்கையில் இதுவரை 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் மரணித்துள்ளனர். எமது கிழக்கு மாகாணத்திற்கு இதனால் பெரிய பாதிப்பு இன்மையால் நாம் இதனை உணர மறந்துவிட்டோம்.

கடந்த மார்ச் 20 முதல் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து எமது சகோதர தமிழ், சிங்கள சகோதரர்கள் புதுவருடத்தை கொண்டாடவில்லை. வெசாக் பண்டிகையை கொண்டாட முடியாமல் உள்ளனர். ஆனால் எமது சமுதாயமோ துணிக் கடைகளுக்குள் முட்டி மோதி திரிகின்றது.

நிவாரணம் காசு சேர்த்தற்கு விமர்சனம், உணவு அருந்தியமைக்கு விமர்சனம், மரம் கொடுத்தற்கு விமர்சனம், தொழுகை அட்டவணை கொடுத்தற்கு விமர்சணம் செய்யும் எமது இளைஞர்கள் இந்த புடவைக்கடை பிரச்சணையை கண்டு கொள்ளவில்லை ஏனெனில் அவர்களும் டிசைன் T shirt தான் தேடி திரிகிறார்கள்.

சகோதர்களே எமது பிரதேசத்தில் ஒருவருக்கு covid 19 positive இருந்தால் ( அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) இந்த பெருநாளுக்கிடையில் அணைவரையும் காவு கொடுத்து விடுவோம். அவ்வாறுதான் ஊரின் நிலமை உள்ளது. இம்முறை பெருநாள் இல்லையேல் அடுத்த முறை கொண்டாடலாம் இப்போது உயிர் முக்கியம், ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன, அல்லாஹ்வுக்காக ஒரு நிமிடம் யோசித்து எமது நாட்டையும், ஊரையும் பாதுகாக்க ஒத்துழைப்போம்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe