ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலக கொரோனோ பாதுகாப்பு செயலணியினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) அறிவிக்கப்பட்ட விஷேட அறிவித்தலின் கீழ் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட புடவைக் கடைகள் செயற்ப்படுகின்றனவா என கண்டறியும் நோக்குடன் இன்று (06) விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சம்மாந்துறையில் அமைந்துள்ள அனைத்து புடவைக் கடைகளினதும் கோரோனா மற்றும் பொதுச் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் அறிவுறுத்தப்பட்டதோடு. முகக் கவசம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதவர்களை திருப்பதி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.