Ads Area

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்.

பாறுக் ஷிஹான்

 3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில்  பகுதியை  சேர்ந்த பெண்மணி  ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(28)  அம்பாறை மாவட்டம் கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.

18.5.2020 அன்று குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  35 வயதுடைய பொத்துவில் நகரப்  பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை(28)  காலை    மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு சிகிச்சைக்காக  கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு  அங்கு   சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன்   2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன்  தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில்  குறித்த சத்திர சிகிச்சையினை அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளிடங்கலாக   மகப்பேற்று வைத்திய  நிபுணர்  ராஜிவ்  விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

இதில் இரு   ஆண் குழந்தைகளும்  தலா1910கிராம்    1960கிராம்  மற்றும் பெண் குழந்தை  1480 கிராம்  நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே போன்று கடந்த மாதமும் இதே மாதமும் நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியை சேர்ந்த இரு  பெண்களுக்கு தலா    ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை  குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக ஹொரொனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe