சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த உபைதுல்லாஹ் என்ற மாணவன் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பயன்படுத்தும் sencer முறையில் உருவாக்கப்பட்ட தன்னியக்க மற்றும் பொறிமுறையிலும் இயங்கக்கூடிய கைகழுவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவரின் இப் புதிய கண்டுபிடிப்பினை சம்மாந்துறையில் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி தேசிய சர்வதேச ரீதியில் சாதனை படைத்தவரும், தங்கப்பதக்கங்களைப் பெற்றவருமான சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினோஞ் குமார் அவர்களும் மற்றும் சமாதான நீதவானும், எழுத்தாளருமான திரு. முஹம்மட் அமீர் அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இவர் சம்மாந்துறையின் மதிப்பிற்குமுரிய பிரபல மௌலவி முஸ்தபா அவர்களின் புதல்வராவார்.