சவுதியில் ஊரடங்கு உத்தரவு முற்றாக நீக்கப்பட்டு சகல பள்ளிவாசல்களில் மீண்டும் வழமை போன்று தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்த விரிவான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தெடர்ந்து சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட இருப்பதாக சவுதி அரேபியாவின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதங்களில் சவூதி அரேபியா அதன் பெரும்பாலான நகரங்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ரமலான் மாதம் தொடங்கியதை தொடர்ந்து தளர்த்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவானது ஈத் விடுமுறையை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் மறுபடியும் நாடு தழுவிய 24 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 24 மணி நேர ஊரடங்கு உத்தரவினைத் தற்போது சவுதி அரேபியாவில் 3 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பின்னர் முற்றிலும் நீக்கப்படவுள்ளது.