Ads Area

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

சம்மாந்துறை அன்சார்.

மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், டுபாய், ஓமான், பஹ்ரைன் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பினால் வேலையிழந்து மற்றும் ஊதியமின்றி சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் தாங்களை தாய்நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு பல்வேறு பட்ட கோரிக்கைகளை மேற் கொண்டிருந்தனர் அவர்களுக்காக தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தலினால் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கையர்களை அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இந் நிலையில் இதன் முதல் நடவடிக்கையாக குவைட், மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

குவைத் நாட்டில் பல இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள இலங்கைத் துாதரகத்திற்கு முன்னால் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe