முஸ்லிம்களைப் பற்றி அவதூறாக எழுதிய மேலும் மூன்று இந்தியர்கள் வேலை நீக்கம்..! டுபாய் நிறுவனங்கள் அதிரடி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
துபாயில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக இருக்கும் ராவத் ரோஹித், ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும் இந்தியர் ஒருவரும் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கல்ப் நியூஸ் செய்திகள் தெரிவி்க்கின்றன.
துபாயில் இத்தாலியன் உணவகம் நடத்திவரும் அஜாதியா குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், சமையல் காரரும் இந்தியருமான ரோஹித்தை வேலையிலிருந்து நீக்கியதை உறுதி செய்துள்ளார்
இந்தியத் தூதரகம் இஸ்லாம் குறித்து அவதூறான கருத்துக்களை, சர்ச்சைக்குரிய வாசகங்களை பதிவிட வேண்டாம் என கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எச்சரித்தும் இவர்கள் தொடர்ந்த அந்த செயலைச் செய்துள்ளனர் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த மாதம் 20ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியத் தூதர் பவன் கபூர், அங்குள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ட்விட் செய்திருந்தா். அதில் “ இந்தியாவும்-ஐக்கிய அரபு அமீரகமும் எந்த அடிப்படையிலும் வேறுபாடு பார்ப்பதில்லை. நம்முடைய ஒழுக்கத்துக்கும்,சட்டத்துக்கும் மாறானது பாகுபாடுகாட்டுவது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்
கடந்த வாரம் விஷால் தாக்கூர் என்ற பொய்யான பெயரில் சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிய இந்தியரை துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்கார்ட் குழுமம் வேலையிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் - https://gulfnews.com
செய்தி மூலம் - https://gulfnews.com