அவசியம் என்பதற்காகவும் ... ஆறுதலுக்காகவும்!
போன வருஷம் கொட்டாராமுல்லயில் மனித மிருகங்களால் கொலை செய்யப்பட்ட சகோதரரின்.. பாரியார் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்திருந்தார். விளைவு... நான்கு குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலை கண்டு ஒட்டு மொத்த சமூகமும் நேர்மையாகக் கொதித்தெழுந்தது.
சில வட்சப் குரூப்புகளில்... இன்னும் இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது தொடர்பில் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
நானறிந்ததைக் கொண்டு இத்தருணத்தில் சொல்ல விரும்பும் சில விடயங்கள்:
‣ கடந்த ஒரு வருடமாகவே குழந்தைகளின் தாய் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தைக் கவனித்து... தேவையான உதவிகளைச் செய்து வந்த உறவினர்கள் தொடர்ந்தும் அக்குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்கள்.அவர்கள் கைவிடவோ.... கைவிடும் எண்ணத்திலோ இல்லையென உறுதியாக தெரிவிக்கிறார்கள்.
‣ நான்கில் ஒரு குழந்தை, இரு குழந்தைகள், மூன்று குழந்தைகள் என தனித்தனியாக தத்தெடுக்க கொழும்பைத் தளமாகக் கொண்ட மிகப் பெரும் தனவந்தர்கள் கூட முன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு அக்குழந்தைகளை பிரிப்பது இக்கட்டான இக்கால கட்டத்தில் எவ்வகையிலும் அவசியமற்றது.
‣ இது தொடர்பில் ஆளுமையுள்ள சமூகப் பிரமுர்களின் கருத்து என்னவெனில், கொரோனா சூழ்நிலை முடிந்ததும் அங்கு சென்று, அக்குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கு உதவும் வகையிலான Fixed Deposit போன்ற நிதி வசதியை உருவாக்குவது. அதைக் கொண்டு அவர்கள் எதிர்காலத் தேவைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
‣ மேலும், மற்றவர் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு... நாட்டின் சட்டத்திற்கமைவாகவும் மார்க்கச் சட்டத்தின் அடிப்படையிலும் தகுதி பெறவும் வேண்டும். எனவே, அது பேச்சளவுக்கு அப்பாற்பட்டது.
தற்சமயம் நாம் செய்யக் கூடியது..... இந்த விடயத்தை ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்து, அக்குழந்தைகளுக்காகவும், உறவினர்களுக்காகவும், உலகை விட்டுப் பிரிந்த பெற்றோருக்காகவும் பிரார்த்திப்பதே. அனைத்து விடயங்களையும் இறைவன் இலகுவாக்கட்டும்!
Irfan Iqbal
03-05-20