ஏ. அகீல் சிஹாப்.
கொடிய கொரோனா நோயிலிருந்து இந்நாட்டு மக்களை பாதுகாக்கும் முகமாக அரசினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் ஏழை குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களது புனித ரமழான் மாதத்தில் பல வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் மஹல்லாக்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய 125 குடும்பங்களுக்கு இன்று (14) உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.