ஐ.எல்.எம் நாஸிம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு (13) சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைக்கப்பட்டது.