கொரோனா வைரஸ் குறித்த சாதகமான புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜூன் 20 ம் திகதி தேர்தல் ஆணையாளர் தேர்தலை நடத்தச் செய்வதற்காக அரசாங்கம் பிழையான புள்ளிவிபரங்களை பெற முயல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளுடனான சமீபத்தைய சந்திப்பின்போது தேர்தல் ஆணையாளர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை அடிப்படையாகவைத்தே தேர்தல் குறித்து தீர்மானிப்பேன் என குறிப்பிட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் இன்னமும் ஆபத்துள்ளதை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக தனிமைப்படுத்தல்கள் பின்பற்றப்படாது என்பதால் தேர்தலை இந்த தருணத்தில் நடத்துவது பிரச்சினையான விடயம் என குறிப்பிட்டுள்ள லக்ஸ்மன் கிரியல்ல இதன் காரணமாக வைரஸ் பரவலாம் எனவும் தெரிவித்துள்ளார்.