Ads Area

சம்மாந்துறையில் இடம் பெற்ற சம்மாந்துறை கல்வி வலய அதிபர்களுக்கான விளக்கமளிப்புக் கூட்டம்.

(காரைதீவு  சகா)

கொரோனா நெருக்கடியினால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் வரை மற்றும் திறக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்  சம்மாந்துறையில் நடைபெற்றது.

சம்மாந்துறை வலய அதிபர்களுக்கான கூட்டம்  சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம்  தலைமையில்  நடைபெற்றது. வலயத்திலுள்ள  71 பாடசாலை அதிபர்களும் முகக்கவசம் அணிந்து சமுக இடைவெளியைப் பேணியவாறு முழுமண்டபத்திலும் அமர்ந்து காணப்பட்டனர்.

பாடசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட  சுற்றுநிரூபம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டது.பிரதிக்கல்விப்பணிப்பாளர்களும் சமுகமளித்திருந்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் நஜீம் தமதுரையின் போது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் வரை மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

கொவிட் 19 விடுமுறை காலப்பகுதியில் பாடசாலைகளில் டெங்கு பரவுகின்ற இடங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அண்மையில் வெளியான க.பொ.த(சா.த)பரீட்சை முடிவுகள் சென்ற வருடத்தை விட முன்னேறியமைக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்ஆசிரிய ஆலோசகர்கள்மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலுல் தரம்-5 மாணவர்களுக்கான வினாப்பொதி மற்றும் AIP கையேடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe