Ads Area

அம்பாறை மாவட்டத்தில் 54 நாட்களாக நிவாரணப்பணியை தொடரும் கொவிட்’கெத்து’ அணியினர்.

(விபுலமாமணி சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 54நாட்கள் தொடர்ச்சியாக மக்கள்நல நிவாரணச்சேவையை முன்னெடுத்துவந்த கொவிட்  ‘கெத்து’ அணியினரின் உலருணவு நிவாரணவிநியோகம் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் காயத்ரிகிராமம் நேருபுரம் தங்கவேலாயுதபுரம் பொத்துவில் பிரதேசத்தில் சங்குமண்கண்டி ஆகிய கிராமங்களில் இடம்பெற்றது.

பொத்துவில் திருக்கோவில் பிரதேசங்களிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராம ஏழைமக்களுக்கு லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினர் 250 உலருணவுப் பொதிகளை நேற்று நேரடியாகச்சென்று வழங்கிவைத்தனர்.திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 28பேருக்கும் அவர்களது வீடுகளுக்குச்சென்று உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்.

சங்குமண்கண்டி காயத்ரிகிராமம் நேருபுரம் வில்காமம் கோம்பக்கரைச்சி தங்கவேலாயுதபுரம் ஆகிய பின்தங்கிய பிரதேச மக்களுக்கு கரடுமுரடான பாதைகளுடாக பயணித்து இப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மூன்று பிரதேச செயலாளர்கள் மற்றும் ஒரு உதவி பிரதேசசெயலாளர்கள் ஒரு தவிசாளர் முன்னிலையில் கிராமசேவை உத்தியோகத்தர்களுடாக இவ்வுணவுத்தொகுதி வழங்கிவைக்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனைவடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிபிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன்காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் இந்நிகழ்வுகளில் முழுநேரமும் கலந்துகொண்டிருந்தனர்.

அகிலன் பவுண்டேசன் நிறுவன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சமுகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா வி.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இப்பொதிகளை கொண்டுசென்று வழங்கிவைத்தனர்.


கூடவே ஊடகவியலாளர்களான பு.கேதீஸ், வ.டினேஸ், ஜே.கே.யதுர்சன் ஆகியோரும் பயணித்தனர்.
உலருணவுக்கு அப்பால் குழந்தைகளுக்கான பீடியாபுறோ பால்மாவையும் வழங்கினர். அதுமட்டுமல்ல இரட்டைநிவாரணத்திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயற்படுத்தினர்.அதாவது பொத்துவில் ஊறணி மணற்சேனை  ஏழைத்தொழிலாளிகளினது உற்பத்திப்பொருட்களை நியாயமானவிலையில் கொள்வனவுசெய்து மரக்கறி தட்டுப்பாடு நிலவும் குறிப்பாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இலவசமாக  வழங்கினர்.  ஒருவகையில் இது இரட்டை நிவாரணமாகும் . இச்செயற்றிட்டம் தொடர்ச்சியாக 5வது தடவையாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.இத்திட்டம் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. பலர் குறிப்பாக புலம்பெயர்உறவுகள் பல தாமாக உதவ முன்வந்தன.அந்தவகையில் பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றிய அனுசரணையில்  நேற்றுமுன்தினம் பொத்துவில் ஊறணி மற்றும் மணற்சேனைக்கிராமங்களில் கொள்வனவுசெய்த கத்தரிக்காய் மற்று மிளகாய்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவர்புரம் வளத்தாப்பிட்டி கணபதிபுரம் புதியவளத்தாப்பிட்டி மல்வத்தை  ஆகிய பின்தங்கிய கிராம மக்களுக்கு இலவசமாக நிவாரணமாக வழங்கிளனர்.மேலும லண்டன் அகிலன் அறக்கட்டளை நிதியத்தினால் ‘டிஜிடல்’ உடல்வெப்பமானிகள்   கல்முனை பிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் பணிமனைக்கு வழங்கிவைக்கப்பட்டது..லண்டன் அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் கோபாலப்பிள்ளையினால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை  மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15000ருபா  பெறுமதியுடைய 25  கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை  அம்பாறை மாவட்ட அகிலன் அறக்கட்டளை அமைப்பாளர் சோ.வினோஜ்குமார்  ஏற்பாடு செய்திருந்தார்.

இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர்களான கி.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா ஆகிய மூவரின் நன்மதிப்பு காரணமாக புலம்பெயர் அமைப்புகள்  பல தாமாக முன்வந்து சுமார்  40 லட்சருபா பெறுமதியான உலருணவு நிவாரணங்களை  வழங்கிவைத்ததது.. ஊரடங்கு வேளையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நிவாரணப்பணியினை இடைவிடாது தொடர்ந்திருந்தமை குறிப்பிபடத்தக்கதாகும்.

இக்குழுவினர்   லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் ‘அன்பேசிவம்’ பிரிட்டன் ‘சிவகாமி அறக்கட்டளை நிதியம்’ அசிசிஸ் ஆர்ஆர் வசீகரன் அறக்கட்டளை நிதியம் பிரிட்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் கனடா அகவம் அமைப்பினர் கதிர்காமபாதயாத்திரீகர் மணிவாசகர் லண்டன்  அகிலன் பவுண்டேசன் நிறுவனம் போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள  வளத்தாப்பிட்டி பளவெளி புதியவளத்தாப்பிட்டி அட்டப்பள்ளம் திராய்க்கேணி  காரைதீவு கோரக்கர்கிராமம்  வீரச்சோலை மண்டானை காயத்ரிகிராமம் மத்தியமுகாம் சவளக்கடை கோபாலபுரம் 7ஆம் கிராமம் நாவிதன்வெளி அன்னமலை சங்குமண்கண்டி உமிரி சங்குமண்கிராமம் தங்கவேலாயுதபுரம் திருப்பதி கஞ்சிக்குடிச்சாறு மணற்சேனை செல்வபுரம் கோமாரி  ஊறணி நேருபுரம் வில்காமம்  ஆலையடிவேம்பு பனங்காடு மளவராயன்கிராமம் நாவற்காடு தம்பட்டை ஆகிய பின்தங்கிய  பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்பாடுகள் அனைத்தும் மேற்கூறிய 3பிரதேசசெயலாளர்களுடன் நாவிதன்வெளி பிரதேசசெயலர் எஸ்.ரங்கநாதன் ஆலையடிவேம்பு பிரதேசசெயலர் க.லவநாதன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசனின் ஒப்புதலுடன் சீராகவும் செம்மையாகவும்  நடைபெற்றன.

அம்பாறை மாவடடத்தில் கொரோன நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்படட மக்களுக்கு முறைப்படி பிரதேசசெயலரின் அனுமதியோடு  தொடர்ச்சியாக 54நட்கள் நிவாரணசேவையை முன்னெடுத்த குழுவென்றால் அது ‘கெத்து ‘நிவாரண  அணியிராகத்தானிருக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe