Ads Area

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்த அவர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படும்.

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு திரும்பி வரும் இலங்கையர்கயர்கள் தேர்ந்தேடுக்கப்பட்ட ஹோட்டல்களில் குறைந்தளவு கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அதன்படி, இலங்கை இராணுவத்தால் கண்காணிக்கப்படும் இந்த ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 7,500 அறவிடப்படும்.

இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்த இலங்கைக்கு திரும்பும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து பல இலங்கையர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு விமானங்கள் இலங்கை வரவுள்ளன.

முதல் விமானம் இன்று 260 பயணிகளுடன் இங்கிலாந்திலிருந்து வருகை தரவுள்ளது.  அவர்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் இவர்களுக்கே இவ்வாறு குறைந்த கட்டணத்தில் ஹோட்டல்களை ஒழுங்கு செய்துள்ளோம்.

ஜெட்விங் ப்ளூ & சிட்ரஸ் வஸ்கடுவ ஆகியன முதல் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களாக பயன்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe