ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்து அந்த உடலை போஸ் மோட்டம் செய்யும் போது அதன் சொந்தங்களின் சோக உணர்வுகளை நான் அடிக்கடி காணும் ஒருவன்.
எனது தந்தையின் அல்லது தாயின் அல்லது பிள்ளையின் அல்லது மனைவியின் அல்லது கணவனின் உடலை எப்படியும் போஸ்ட்மோடம் செய்யாமல் எடுக்க முடியாதா? என்று கண்ணீர் மல்க, கவலை தோய்ந்த முகத்தோடு கேட்கும் எத்தனையோ உறவுகளை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு,
அவர்களை ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறேன்.
இந்த கொவிட் 19 தொற்றுக்குப் பின்னர் எரிக்கப்படும் உடல்களின் நிலைகளை எடுத்துச் சொல்லி ஏதோ ஆற்றுப்படுத்தவும் சமாதானம் சொல்லவும் முடிகிறது.
எது எப்படியோ இறந்த ஒரு உடலை மென்மையாக கையாழ வேண்டும் என்பதும் அதன் எழும்புகளை உடைக்கவோ நோவினை செய்யவோ கூடாது என்பதும் இஸ்லாத்தின் வேண்டுகோள் என்பது மட்டும் உண்மை.
சமீபத்தில் ஒரு தந்தை இறந்து போக, அவரது உடலை பிணவறையில் இருந்து தூக்கும் போது, இழுத்துப் புரட்டியதை தடுக்கத் துடித்த இரு புதல்வர்களையும் பார்தேன்.
எது எவ்வாறாயினும் சில விடையங்கள் தவிர்க்க முடியாதவை. எவராலும் தடுக்கவும் இயலாதவை.
ஆயினும் அந்த அனுபவங்கள் அனைத்தும் இயலுமான முன் ஆயத்தங்கள் சிலதை செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.
நம்மில் அதிகமானோருக்கு sugar, Cholesterol, pressure, heart disease என்று ஏதோ ஒரு நோய் இருக்கவே செய்கிறது.
ஆயினும் பெரும்பாலானவர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்வதில்லை. வசதி இருப்பதால் பணம் கொடுத்து பார்மஸிகளில் மாத்திரைகளை வாங்கி பாவிக்கிறோம்.
இந்நிலையில் திடீரென்று அந்த நோய் அதிகரித்து அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, காரணம் கண்டறிய முன்னர் மரணமடைந்து விடும் போதுதான் போஸ்ட்மோடம் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
முன்னரே இருந்த நோய் குறித்தான எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்கும் நிலையில் போஸ்ட்மோடம் செய்யாது உடலை எடுக்க முடியாமல் போகிறது.
ஆகவே எனது அன்பான உறவுகளே!
நீங்கள் தனியார் வைத்தியசாலையில் அல்லது பார்மஸில் மருந்து மாத்திரைகளை வாங்கி பாவியுங்கள். அது உங்களின் வசதியை பொறுத்தது.
ஆனால் உள்ள நோயை அரச மருத்துவமனை ஒன்றில் பரிசோதித்து கிளினிக் புத்தகம் மற்றும் ஆவனங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
அவை சில வேளைகளில் உங்கள் இறப்பின் பின்னர் உடல்களை இலகுவாக எடுப்பதற்கு உதவலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது மரணத்தையும் இலகு படுத்தி, இறந்த பின்னர் எமது உடல்களை சித்திரவதை இல்லாமல் இஸ்லாம் காட்டிய இயற்கையான முறையில், எழிமையான வழியில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு அருள் புரிவானாக!
அன்புடன் ஹாறூன் (ஸஹ்வி)