வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் மலையாளிகளை தாய்நாட்டிற்கு அழைக்க 1000 இலவச விமான டிக்கெட் வழங்கும் நடிகர் மம்முட்டி!
திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மம்மூட்டி (Muhammad Kutty Panaparambil Ismail) தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதன்படி வளைகுடாவில் பணிபுரியும் 1,000 நபர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என்று கைரேலி சேனலின் இயக்குநர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த உங்கள் நண்பர்கள் இருப்பின், இந்த திட்டத்தில் இடம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
United Arab Emirates (UAE)
Kairali TV Door No.3204,
32nd Floor Liwa Heights Jumeirah Lakes Towers Dubai,
UAE Call: +971 044341348 +971 50 6515722
Fax : +971 044341349
இமெயில் & இணைய தள முகவரி:
malayalam@kairalitv.in
(நன்றி - இன்னேரம்)
News from - Qatar Tamil News