Ads Area

வலையில் சிக்கிய நல்ல பாம்பைக் காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழப்பு!

தமிழ்நாடு

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டியிருந்த வலையில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிக்கியுள்ளது.

அதைக் கண்ட ராஜசேகர் வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய நல்ல பாம்பை மீட்டுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது கையில் கடித்து விஷம் தலைக்கு ஏறி சிறிது நேரத்திற்குள் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக  சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.


அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துள்ளார். வலையில் சிக்கிய பாம்பை மீட்ட வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe