கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு நாளை (மே-07) பறக்கவிருந்த விமானத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தாரிலிருந்து இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும் முதல் விமானம் இந்தியாவின் கேரள மாநிலம் - கொச்சிக்கு நாளை (மே-07) செல்வதற்கு பதிலாக சனிக்கிழமை (மே-09) செல்லவிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நாளை பறக்க விருந்த விமானப் பயணம் சனிக்கிழமை (மே-09)க்கு மாற்றப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொழில்நுட்ப காரணங்கள் தான் என்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிக்கெட் விற்பனைக்காக வேண்டி ஏர் இந்தியா அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பயணிகளின் நலனுக்காக ICC சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய அட்டவணை நிலவரப்படி 200 பயணிகள் எதிர்வரும் 10ம் திகதி திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களுக்கான பயணிகள் பட்டியல் கத்தாரிலுள்ள எம்பஸ்ஸியின் இணையத்தின் தங்களை பதிவு செய்தவர்களிலிருந்து தூதரகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளன.
(கத்தார் தமிழ்)