(கோபால்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் 2020.05.03 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு வீடுடைத்து கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து,
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்காவின் கட்டளையின் பிரகாரம் கல்முனைப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் முத்தகய ஜெனச்சந்திர ஆலோசனைக்கமைய சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி விஜயராஜா மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் யனோசன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக சம்பவம் நடந்து 12 மணித்தியாலங்களுக்குள் கல்லரிச்சல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிந்து களவாடப்பட்ட பதினைந்தே முக்கால் பவுன் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை நாளை சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - battinews