Ads Area

சவுதியில் மீண்டும் தொடங்கவுள்ள விமானப் பயணங்கள்.

சம்மாந்துறை அன்சார்.

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு  தற்காலிக தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சவூதி அரேபியா தனது தேசிய விமான நிறுவனங்கள் வழியாக மே 31 முதல் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின்(GACA) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து “இரண்டு வாரங்களுக்குள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுடன், அனைத்து உள்நாட்டு பகுதிகளுக்கும் விமானங்களை மீண்டும் இயக்குவது படிப்படியாக அமலுக்கு வரும்” என்று சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே வேளை General Authority of Civil Aviation (GACA) of the Kingdom. விமானப் பயணங்களுக்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது,

01. விமான நிலையத்திற்கு உள்நுழையும் போது முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிவது கட்டாயம் எனவும் அவ்வாறு அணியாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

02. மேலும் விமானப் பயணச் சீட்டுக்களை ஒன்லைன் ஊடாக மாத்திரமே பெற்றுக் கொள்ள வேண்டும்.

03. விமானநிலையத்திற்கு உள் நுழையும் போது உடல் வெப்ப நிலையனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

04. போர்டிங் (boarding) எடுக்கும் இடத்தில் யாரும் ஒருவரை ஒருவரை ஒட்டியவாறு நெருக்கமாக நிற்க முடியாது.

05. விமான நிழையத்திற்கு நுழைவதற்கு முன் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் அதே போல் சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.

06. விமான நிலையத்திற்கு 2 மணித்தியாலத்திற்கு முன்னர் செல்ல வேண்டும் அதே போல் ஒருவர் ஒரு லகேச் மாத்திரமே உடன் எடுக்க முடியும்.

என சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது சவுதி அரேபியாவில் உள்நாட்டு விமான சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது  இதேவேளை சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe