கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்த அடிப்படையில் மேலும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் ஊடாக தெரிவித்துள்ளது.
கத்தாரின் தொண்டு நிறுவனமான கத்தார் செரிட்டி (Qatar Charity) தேவையான இலங்கையர்களுக்கு பகிர்ந்தளிக்க பெருமளவான உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளதாக கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தார் தமிழ்.