கொரோனோ தாக்கத்திற்கு உள்ளான பல உலக நாடுகளில் நிகழும் மரண விகிதத்தை ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் மிகக் குறைவான அளவாகவே மரணங்கள் நிகழ்வதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் டொக்டர் தௌபீக் அல்-றாபியாஹ் (Dr.Tawfiq Al-Rabiah) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
உலக நாடுகளை ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் கொரோனா மரணங்கள் 0.7 விகிதத்தில் மிகக் குறைவாகவே நிகழ்வதாகவும் இது கொரோனா தாக்கத்திற்கு உள்ளான நாடுகளைப் பார்க்கையிலும் மிகக் குறைவான விகிதமாகும்.
கொரோனோ வைரஸ் அச்சம் நிலவிய ஆரம்ப காலத்தில் சவுதி அரேபிய அரசு முன்னெச்சரிக்கையாக ஆயிரத்திற்கு மேற்பட்ட ICU படுக்கைகள் மற்றும் சுவாசக் கருவிகளை தயார் நிலையில் வைத்திருந்தது தற்போது அவற்றில் 96 வீதமானவைகள் பயண்படுத்தப்படாமலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் அதிகளவான கொரோனோ பரிசோதனைகள் செய்யப்பட்டதனாலேயே பல கொரேனா தொற்றாளர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் இதற்கு நாட்டில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் அனைவரும் பாரிய ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார் (Editor-in-Chief)