(ஜே.எப். காமிலா பேகம்)
குவைட் மன்னரை நாய் என்று திட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த இலங்கைப் பெண் அந்நாட்டு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் இடையே இலங்கை தொழிலாளர்களை குவைட் அரசாங்கம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறித்த பெண் முகநூலில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து குவைட் நாட்டில் உள்ள குறித்த இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.