Ads Area

சம்மாந்துறை SWDC அமைப்பினால் இரு ஏழைகளுக்கு வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை SWDC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஏழைகளுக்கான வீடு வழங்கல் திட்டத்தின் முதல் இரண்டு வீடுகளும் நேற்று (30/05/2020) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சம்மாந்துறை செந்நெல் கிராம, கிராம சேவகர் பிரிவில் கொடையாளி ஒருவரினால் வழங்கப்பட்ட காணியில் குறித்த பயனாளிகளுக்கு வீடு நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளது  சுமார் 750,000 ரூபா செலவில்  அமைக்கப்பட்ட இரு வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது  SWDC இன் தவிசாளர் AL ஜகுபர் சாதிக்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனீபா, மஜ்லிஷ் அஷ்ஷூராவின் அமீர் கண்ணியத்துக்குரிய ஆதம்பாவா (மதனி), நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மதிப்பிற்குரிய  மஃறூப் மௌலவி மற்றும் நன்கொடையாளிகள், SWDC இன் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் போன்றோர்கள் கலந்துகொண்டனர். 

இவ்வீடமைப்பு திட்டமானது SWDC இன் உப பிரிவான உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீடுகளை அமைக்க காணி, பண உதவிகளை புரிந்த அனைத்து கொடையாளிகளுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்குவானாக! ஆமீன்.

இன்னும் பல வீடுகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதனால் தனவந்தர்கள, கொடையாளிகள் எம்மை தொடர்பு கொண்டு வழங்க முடியும்.


தகவல் - Media Unit SWDC- Sri Lanka











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe