கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது மாகாண பணிப்பாளராக எம்.டி.எம்.நிஸாமை நியமித்தார். இந்த நிலையில் குறித்த நியமனத்திற்கு எதிராக மன்சூரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே தீர்ப்பிற்கான திகதி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் இறுதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே இன்று 1 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.