காலால் இயங்கும் மற்றும் தன்னியக்க உணரி (sensor) மூலமும் இயங்கும் கைகழுவும் இயந்திரம் ஒன்று Reessa Str ஸதகா அமைப்பினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் வளர்ந்து வரும் இளம் கண்டுபிடிப்பாளரான எம்.எம். உபைதுல்லாஹ் என்ற மாணவரால் இன்றைய கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் வைத்திய ஆலோசனைகளுக்கு ஏற்ப கைகளை சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தைப் பேணி கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெரும் நோக்கில் இத் தன்னியக்க கை கழுவும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் கண்டுபிடிப்பாளர் எம்.எம். உபைதுல்லாஹ் அவர்கள் இவ் இயந்திரத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்க வேண்டும் எனக் கொண்டிருந்த நல்லெண்ணத்தை நிறைவேற்ற Reessa Str ஸதகா அமைப்பானது அவரை ஊக்கப்படுத்தும் முகமாக அவ்வியந்திரத்தை அவரிடமிருந்து கொள்வனவு செய்து வைத்திய அத்தியட்சகர் அசாத் எம்.ஹனீபாவிடம் இன்று திங்கட்கிழமை (01/06/2020) அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.
மாணவரான எம்.எம். உபைதுல்லாஹ் அவர்கள் முஸ்தபா மௌலவியின் ( உஷ்வா மத்ரஸா) மகனாவார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மாணவரான எம்.எம். உபைதுல்லாஹ் அவர்கள் முஸ்தபா மௌலவியின் ( உஷ்வா மத்ரஸா) மகனாவார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.