அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த மே 25 ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.
தற்போதே இந்த காணொளியைப் பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இது விடையத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.